Description
1) சைவ சித்தாந்த கொள்கையாம் முப்பொருள் உண்மையாகிய பதி, பசு, பாசம் ஆகிய தத்துவங்களை நாற்பதே வரிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த முதல் நூல். 2) ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சிறந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டது. 3) சித்தியார் – பரபக்கம், சங்கற்ப நிராகரணம் போன்ற பிர சாத்திர நூல்கள் போல பிற சமயங்களை எங்கேனும் தூற்றாமல், இதுவே சைவசித்தாந்த சாறு என்று துணிந்து சொல்லும் வகை படைக்கப்பட்டது. 4) மதச்சடங்குகளோ, புராணக்கதைகளோ சொல்லப்படாமல் தத்துவமாகிய சாத்திரத்தை மட்டும் கூறுவதால் இது முழுக்க முழுக்க சாத்திர நூலே.
சைவ சித்தாந்த சாஸ்திர நூல்கள் பதினான்குள் முதன்மையானது முப்பொருள் உண்மையாம் பசு, பதி, பாச தத்துவங்களை பண்ணிரெண்டு சூத்திரங்களுள் விளக்கும் மெய்கண்டாரின் சிவஞான போதமாகும். பொள்ளாப் பிள்ளையார் வாழ்த்துடன் துவங்கி அவையடக்கம் தெரிவித்து, பொது இயலில் ஆறு, சிறப்பு இசையில் ஆறு என 40 அடிகளில் பன்னிரெண்டு சூத்திரங்கள் செய்யுள் வடிவில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் பொருள் உரை,தெளிவுரை, தொகுப்புரை என மிக விரிவாகவும் எளிய நடையில் மேற்ககோள் காட்டியும் விளக்கம் தந்துள்ளது.சிறப்பு வழிகாட்டி இல்லாமல் நூலைப் படித்து புரிந்து கொள்ள முடியும். சிவஞான போதம் பற்றிய அருமையான பயனுள்ள பொக்கிஷம்.
Reviews
There are no reviews yet.