Description
இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
Reviews
There are no reviews yet.